இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொன்சேகாவுக்கு உரிய வசதிகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

JKR  புதன், 2 பிப்ரவரி, 2011

சிறையிலுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு முன்னர் இராணுவ நீதிமன்றம் வழங்கும் படி கூறிய சகல வசதிகளையும் வழங்கும் படி, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீபாலி விஜயசுந்தர இன்று புதன்கிழமை பணிப்புரை வழங்கியுள்ளார்.
முன்பு ஒரு தடவை சரத் பொன்சேகாவுக்கு சுடு தண்ணீர் மற்றும் மருந்து ஆகிய வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணித்த போதிலும் அவை வழங்கப்படவில்லை என சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் முறையிட்ட போதே நீதிபதி இவ்வாறு பணித்தார்.
இராணுவத்தை விட்டு ஓடியவர்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பிலான வழக்குக்காக சரத் பொன்சேகா இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
இராணுவ விடயங்களில் ஊழல் செய்தார் என குற்றம் காணப்பட்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றம கடந்த செப்டம்பர் மாதம் 30 மாத சிறை தண்டனை வழங்கியது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr