இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புலிகள் இயக்கத்தை மீள இயக்குவதற்கு கப்பம் கேட்டவர்கள் தடுப்பு காவலில்

JKR  வியாழன், 10 பிப்ரவரி, 2011

திரேசன் வீதியை சேர்ந்த பீடி இலை இறக்குமதி செய்யும் ஆறுமுகம் மாணிக்கம் சுப்பிரமணியம் எனும் வர்த்தகரிடம் ஏழு மில்லியன் கப்பம் கோரிய இருவர் கொழும்பு பிரதான நீதவானின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸாரால் இன்று புதன்கிழமை தொடக்கம் தடுத்துவைக்கப்;பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டியில் வசிக்கும் இந்த வர்த்தகரிடம் புலி இயக்கத்தை மீளவும் இயக்குவதற்குக ஏழு மில்லியன் வழங்க வேண்டும் என இவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு செய்யவிடின் அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கெடுதி விளைவிக்கப்படும் என இந்த அனாமதேய தொலைபேசி அழைப்பாளர்கள் மிரட்டினர்.
வர்த்தகரான மாணிக்கம் சுப்பிரமணியம் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
பணம் கொடுக்கும்போது கப்பம் கோருபவர்களை கையும் மெய்யுமாக பிடிக்க பம்பலப்பிட்டி பொலிஸார் ஒழுங்கு செய்தனர்.
செட்டித்தெருவிலுள்ள ஒரு நகை கடைக்கு அண்மையில் வைத்து பணத்தை முறைப்பாட்டாளர், மிரட்டல்காரர்களிடம் கையளித்தபோது இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மொஹம்மட் சலாகுதீன் மொஹம்மட் அஸ்லம் மற்றும் இந்திய பிரஜையான நூர் அமித் முகம்மட் அஷ்ரப் ஆகிய இருவருமே கைது செய்யபப்ட்டவர்களாவர்.
இவர்களுக்கு புலி இயக்கத்துடன் தொடர்பு உண்டா என விசாரணை செய்வதற்காக இவர்களை தடுத்து வைத்து விசாரரிக்க அனுமதிக்கும்படி குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸார் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர்.
இதற்கான அனுமதியை வழங்கிய பிரதான நீதிபதி விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr