இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி; இங்கிலாந்தை 10 விக்கெட்டுகளால் வீழ்த்தியது

JKR  சனி, 26 மார்ச், 2011

லகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகளால் தோற்கடித்த இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.


இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்துஅணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்றது.

ஜொனதன் ட்ரொட் 86 ஓட்டங்களையும் மோர்கன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சாளர்களில் முத்தையா முரளிதரன் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, திலகரட்ன தில்ஷான் இருவரும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.

திலகரட்ன தில்ஷான் 108 ஓட்டங்களைப்பெற்றார். இது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்ற 10 ஆவது சதமாகும். இந்த உலகக்கிண்ணத் தொடரில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.

உபுல் தரங்க102 ஓட்டங்களைப் பெற்றார். இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 11 ஆவது சதமாகும்.

இலங்கை அணி 39.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கைஅடைந்தது.  எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr