இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

8வயது மகளைத் தந்தையே வல்லுறவு புரிந்த கொடூரம்: கோப்பாயில் நேற்றுமுன்தினம் சம்பவம்

JKR  திங்கள், 7 மார்ச், 2011

னது எட்டு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்படும் தந்தையை கோப்பாய் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரத்தைப் புரிந்த தந்தை, தன்னைக் காட்டிக் கொடுத்தால் வெட்டுவேன் என்று அயலவர்களை வாள் ஒன்றைக் காட்டி மிரட்டிவிட்டுத் தலை மறைவாகியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

சம்பவம் குறித்துப் பொலிஸார் தெரிவித்ததாவது: சந்தேகநபர் கொலைக் குற்றங்கள் தொடர்பான வழக்கில் இரு தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர். அண்மையில்தான் அவர் பிணையில் வெளியே வந்திருந்தார். சம்பவம் இடம்பெற்ற நேற்றுமுன்தினம், நிறை மது போதையில் வீட்டுக்கு வந்த அவர், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து தனது ஒரு மகளை அழைத்துக் கொண்டு சந்தேகநபரின் மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவர் வீட்டுக்குத் திரும்பிய போது, வீட்டில் இருந்த 8 வயது மகள் விம்மி விம்மி அழுதபடி தந்தைக்கு அருகில் இருந்து விசிறிக் கொண்டிருந்துள்ளார். மகளின் உடலில் இரத்தம் காணப்பட்டதை அடுத்து பதற்றப்பட்ட தாய் விடயம் என்னவென்று விசாரித்துள்ளார். அப்போதே தந்தை தன்னைப் பலாத்காரப்படுத்திய விடயத்தை மகள் தாயிடம் கூறியுள்ளார். விரைந்து செயற்பட்ட தாய் மகளை கோப்பாய் அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். அங்கிருந்து சிறுமி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்தக் கொடூரத்தைப் புரிந்த தந்தை ஏற்கனவே இருவேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர். அதனால் இரண்டு தடவைகள் நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டவர். 15 நாள்களுக்கு முன்னரே கொலை வழக்கு ஒன்றிலிருந்து அவர் பிணையில் வெளியே வந்திருந்தார். தன்னைப் பிடித்துக் கொடுத்தால் வெட்டி விடுவேன் என்று பெரிய வாள் ஒன்றைக் காட்டி அயலவர்களை மிரட்டிவிட்டுத் தலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்வதற்காகத் தேடுதல்களை முடுக்கி விட்டுள்ளோம் என்றனர் பொலிஸார். எனினும் நேற்று மாலை வரை அந்த நபர் கைது செய்யப்படவில்லை.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr