இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இளம் பூசகர் ஆலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

JKR  செவ்வாய், 15 மார்ச், 2011

சாவகச்சேரி - வரணி இயற்றாலை பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பூசகர் ஒருவரின் சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

சாவகச்சேரியைச் சேந்த இளம் பூசகரான குணாநந்த சர்மா கரிகரசர்மா (வயது 24) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக உறவினர்களால் சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr