இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தெலுங்கில் ரீமேக்காகும் பாடிகார்ட்-நாயகி அனுஷ்கா

JKR  ஞாயிறு, 27 மார்ச், 2011

லையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, அடுத்து இந்திக்கும் போயுள்ள பாடிகார்ட் தற்போது தெலுங்கிலும் புகுந்துள்ளது.
மலையாளத்தில் உருவான படம் பாடிகார்ட். இப்படம் அங்கு சுமாராக ஓடியபோதிலும் தமிழில் காவலன் என்ற பெயரில் பட்டையைக் கிளப்பியது வசூலில். விஜய்யின் மிகப் பெரிய வசூல் படங்களில் ஒன்றாக இதுவும் இணைந்துள்ளது.
தமிழில் தயாரான பாடிகார்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஆசின் நடித்திருந்தார். படத்தில் கதையைப் போலவே காமடியும் கலக்கியதால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
இந்த நிலையில் இப்படத்தை இந்திக்குக் கொண்டு போயுள்ளனர். அதேபோல தற்போது தெலுங்கிலும் இப்படத்தை ரீமேக் செய்யவுள்ளனர்.
விஜய் நடித்த வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கப் போகிறார். ஆசின் செய்த வேடத்தை அனுஷ்கா செய்யவுள்ளார்.
தெலுங்கு ரசிகர்களுக்கேற்ற வகையில் கதையில் சிறிய மாற்றத்தை செய்து, லேசாக மசாலாவையும் குழைத்து படத்தை பிரமாண்டமாக கொடுக்கப் போகிறார்களாம்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr