இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்மன்ற மாநில தலைவர் ஜெயசீலன் நீக்கம்! - எஸ்ஏசி அதிரடி

JKR  திங்கள், 4 ஏப்ரல், 2011

ந்தத் தேர்தலில் விஜய் ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக வேலை செய்ய வேண்டும் என எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர் மன்ற மாநிலத் தலைவர் ஜெயசீலனை நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் எஸ் ஏ சந்திரசேகரன்.

இவருடன் இணைந்து செயல்பட்ட திருவள்ளூர் மாவட்ட செயலாளர் லெனின் பிரபுவும் நீக்கப்பட்டதாக எஸ்ஏசி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநரும், விஜய்யின் அப்பாவும், விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான எஸ் ஏ சந்திரசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலையில் அமைந்துள்ள அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என அனைத்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அடங்கிய பொதுக்குழுவில் வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதை ஏற்றுக் கொண்டு அனைவரும் அதிமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்டு வரும் நிலையில், விஜய் ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவர் சி ஜெயசீலன், மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பிரபு ஆகியோர் இயக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு, களங்கம் விளைவிக்க முயன்றனர். எனவே இவர்களை 4.4.2011 முதல் மன்றத்தின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கிறோம்...", என்று அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr