இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கைத் தமிழர்கள் சுவிஸில் ஆர்ப்பாட்டம்

JKR  திங்கள், 4 ஏப்ரல், 2011

சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்து தலைநகர் பேர்னில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகவுள்ளதால் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டர்களை திருப்பி அனுப்பும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அவர்கள் கோரினர்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல் தஞ்சம் கோருவோர் வடக்கு கிழக்கு பிராந்தியங்களுக்கு திரும்பிச் செல்லலாம் என சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி குடிவரவு அலுவலகம் இவ்வருட முற்பகுதியில் தெரிவித்தது.
எனினும் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்படுவர் என ஈழத் தமிழர்களின் சுவிட்ஸர்லாந்து கவுன்ஸில் கூறுகிறது.
போர் குற்றச்சாட்டுகள் குறித்த சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அவசரகால சட்டத்தை நீக்கினால் மாத்திரமே அகதிகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என அவர்கள் தெரிவத்துள்ளனர்.
கடந்த வருட இறுதியில் 2100 இலங்கை அகதிகளின் அரசியல் தஞ்ச கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருந்ததாக சுவிட்ஸர்லாந்து சமஷ்டி குடிவரவு அலுவலகம் தெரிவித்திருந்தது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr