இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எனது வாழ்க்கையின் மிக முக்கிய போட்டி ; நான் விளையாடுவேன்: முரளி

JKR  வெள்ளி, 1 ஏப்ரல், 2011

நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப்போட்டி தனது வாழ்க்கையின் மிக முக்கியமான போட்டி எனத் தெரிவித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன்,
இப்போட்டியில் தான் விளையாடவுள்ளதாகவும் இன்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
இந்தியாவுடனான உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் காயங்கள் காரணமாக, முரளி விளையாடுவாரா என்பது சந்தேகத்திடமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தான் இப்போட்டியில் விளையாடவுள்ளதாக இன்று டுவிட்டர் மூலம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
முரளிதரன் இப்போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து நிலவிய சந்தேகங்கள் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளன.
வலிகளுக்கு மத்தியிலும் முரளி விளையாடுவார் என இலங்கை அணியின் பயிற்றுநர் ட்ரவோர் பெய்லீஸ் இன்று காலை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr