இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமி கற்பழி்ததுக் கொலை: காமக்கொடூரன் கைது

JKR  திங்கள், 9 மே, 2011

தி ண்டுக்கல் அருகே அய்யம்பாளையத்தில் 6 வயது சிறுமியை கற்பழித்துக் கொலை செய்த காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் எஸ்.கே.டி. நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. தென்னந்தோப்பு காவலாளி. அவரது மகள் காளீஸ்வரி(6).
கடந்த 4-ம் தேதி மருதாஅணை குடியிருப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. அப்போது, பழனிச்சாமி தனது மகள் காளீஸ்வரியை நண்பர் பாண்டி வீட்டில் விட்டுச் சென்றார். அன்று மாலை முதல் சிறுமி காளீஸ்வரியை காணவில்லை.
அக்கம் பக்கம் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து பட்டிவீரன்பட்டி போலீசில் பழனிச்சாமி புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திருவிழாவிற்கு வந்த வெள்ளமரத்துப்பட்டியைச் சேர்ந்த லாரி கிளீனர் கார்த்தி (25) என்பவன் சிறுமி காளீஸ்வரியை தூக்கிச் சென்று, அணைக்கு அருகே உள்ள புதருக்குள் வைத்து கற்பழித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து காமக்கொடூரன் கார்த்தியை போலீசார் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr