அ ரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக செல்வதாக அரசாங்கம் இன்று கூறியுள்ளது.
'13ஆவது திருத்தத்துக்கு அப்பால் அதிகாரங்களை பகிரும் ஏற்பாடு ஒன்றுக்கான சாத்தியங்களை ஆராய்வது எமது நோக்கமாக இருந்தாலும் இப்போதைக்கு இரண்டாவது சபை ஒன்றை நிறுவுவதிலேயே கவனம் செலுத்துகின்றோம்' என அரசாங்கம் கூறியது.
'உணர்வுபூர்வமான இவ்வாறான விடயங்கள்பற்றி நாம் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் நிறுவனங்களுடனும் பேசவேண்டும். த.தே.கூ. தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் பிரதான கட்சியென அங்கீகரிக்கின்றோம்' என அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.
தூதுக்குழுவின் உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் இதுக் குறித்து டெய்லிமிரரிடம் கூறுகையில், மேற்சபை ஒன்றை அமைப்பது, நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்களில் ஒன்று என கூறினார்.
'தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடியளவுக்கு அதிகாரத்தை பகிர வழி செய்யும் ஆலோசனைகளை நாம் முன் வைத்துள்ளோம். இந்த விடயங்களிலேயே தற்போதைய பேச்சு முக்கிய கவனம் செலுத்துகின்றது' என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
இப்பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்க குழுவின் தலைவராகவும் - திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் த.தே.கூட்டமைப்பின் குழுவின் தலைவராகவும் உள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக