இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மன்னாரில் 11 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்; சந்நேகநபர் கைது

JKR  வெள்ளி, 10 ஜூன், 2011

லைமன்னார் பிரதான வீதி சின்னக்கருஸல் கிராமத்தில் 11 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி சிறுமி நேற்று வியாழக்கிழமை பாடசாலை முடிவடைந்த நிலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது குறித்த நபரினால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் உரிய பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நாளை சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr