இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நயன், அசினை காப்பியடிக்க மாட்டேன்! - த்ரிஷா

JKR  திங்கள், 13 ஜூன், 2011

பா டிகார்ட் மலையாளம் படத்தின் நடித்த நயன்தாரா, அதன் தமிழ் வடிவமான காவலனில் நடித்த அசின் இருவருமே சிறப்பாக நடித்திருந்தனர். காரணம் அவர்கள் மிகச் சிறந்த நடிகைகள். அதே நேரம் அவர்களை நான் காப்பியடிக்க விரும்பவில்லை என்றார் நடிகை த்ரிஷா.

மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படம் தமிழில் காவலன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. மலையாளத்தில் நயன்தாராவும், தமிழில் அசினும் நாயகிகளாக நடித்தனர். இப்படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. வெங்கடேஷ், திரிஷா ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்தப் படம் குறித்து த்ரிஸா கூறுகையில், "பாடிகார்ட் படத்தின் கதை அற்புதமானது. உணர்வு பூர்வமான காதலை உள்ளடக்கியது. இதில் எனது கேரக்டர் ரொம்ப பிடித்துள்ளது. ரொம்ப ஈடுபாட்டோடு நடித்து வருகிறேன். நயன்தாரா, அசின் ஆகியோர் மலையாளம், தமிழில் ஏற்கனவே இப்படத்தில் நடித்துள்ளனர். இருவரில் யார் நடிப்பு உயர்வானது என்று சொல்ல முடியாது. இரண்டு பேருமே சிறந்த நடிகைகள், ஆனால் நான் அவர்கள் நடிப்பை காப்பியடிக்க விரும்பவில்லை.
தெலுங்கு பாடிகார்ட் படத்தில் எனது தனித்துவத்தை காட்டுவேன். எனது தந்தை கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். புதுப்படங்களுக்கு இப்போதைக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை," என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr