இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

14 இந்திய மீனவர்கள் கைதான செய்தியை இலங்கை கடற்படை நிராகரிப்பு

JKR  திங்கள், 4 ஜூலை, 2011

14  இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியை இலங்கை கடற்படை நிராகரித்துள்ளது.

இத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இரு படகுகளில் 18 இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றதாகவும் அவர்களில் 14 பேர் கைது செய்யப்பட்டு இலங்கையில் மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. (சுபுன் டயஸ்)
படகு ஒன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கரையோர காவல் படை அதிகாரிகளை மேற்கோள் காட்டி, மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மார்கண்டேயன் தெரிவித்திருந்தார்.
மற்றொரு படகுடன் நான்கு மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பிற்பகல் 12.30 மணியளவில் இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை படையினரால் தாம் கைது செய்யப்பட்டதாக விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய கரையோர காவல் படையினரிடம் தெரிவித்ததாக செய்தி வெளியாகியிருந்தது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr