இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சக மாணவனின் தாக்குதலில் 14 வயது மாணவன் பலி; கல்லடியில் சம்பவம்

JKR  வியாழன், 21 ஜூலை, 2011


ல்லடி, இக்னீசியன் விளையாட்டரங்கில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 14 வயது மாணவனொருவர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த ரின்டன் டலீமா என்ற மாணவனே உயிரிழந்தவராவார். இதனையடுத்து குறித்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 16 வயதுடைய மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது கீழே விழுந்து காயமடைந்த 14 வயதுடைய மாணவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
உயிரிழந்த மாணவனது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக காத்தான்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr