இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரஜினியுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள், ப்ளீஸ்! - சல்மான்கான்

JKR  சனி, 23 ஜூலை, 2011

னதில் தோன்றியதை பட்டென்று யாரைப் பற்றியும் யோசிக்காமல் பேசி விடுபவர் சல்மான்கான். அதனால்தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர், சக நடிகர்கள் மத்தியில் கொஞ்சம் கெட்ட பெயர்.
சமீபத்தில் சல்மான் கானை நமது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒப்பிட்டு சக நடிகர் நடிகைகள் சிலர் பேசினர்.

பாடிகார்ட் படத்தில் சல்மான்கானுடன் நடிக்கும் கரீனா கபூர் கூறுகையில், "இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணை யாருமில்லை. அவர் ஒரு பிறவி நடிகர். அவர் என்ன செய்தாலும் அது புதிய ட்ரெண்ட். அவரைப் போல மக்கள் மனம் கவர்ந்தவர், ஈர்ப்பு மிக்கவர் யாருமில்லை. என்னைப் பொருத்தவரை பாலிவுட்டின் ரஜினிகாந்த் என்றால் அது சல்மான்கான்தான்," என்று கூறியிருந்தார்.
ஆனால் இதனை மறுத்துள்ளார் சல்மான்கான். இந்திய சினிமாவில் ரஜினிக்குள்ள இடம் தனி. இங்கு எனக்கென ஒரு இடம் உள்ளது. எனக்கான இடத்தை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். ரஜினியுடன் யாரையும் ஒப்பிட வேண்டாம் ப்ளீஸ்," என்று கூறியிருந்தார்.
இதை அவர் தன்னடக்கத்தில் கூறினாரா... அல்லது ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளன பாலிவுட் பத்திரிகைகள்.
எப்படியோ... ரஜினி பெயரை இழுத்ததால்தான் இந்த விஷயம் கூட செய்தியாக மாறியது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிந்தால் சரி, என இன்னொரு பத்திரிகை கமெண்ட் அடித்துள்ளது!

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr