இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடமராட்சி தொண்டமனாறு பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துவிச்சக்கர வண்டியில் சூறாவளிப் பிரசாரம்!

JKR  வியாழன், 21 ஜூலை, 2011

டமராட்சி தொண்டமனாறு பகுதிக்கு இன்று (20) விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துவிச்சக்கர வண்டியில் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இச்சூறாவளிப் பிரசாரத்தில் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

தொண்டமனாறு சந்தியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பவனியாகச் சென்ற அமைச்சர் அவர்கள் பிரதான வீதியூடாக ஆதிகோவிலடியைச் சென்றடைந்தார்.

இதனிடையே மக்களது கோரிக்கைகளில் குடிநீர் மின்சாரம் காணியில்லாப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக மக்கள் அமைச்சர் அவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

இவ்விடயம் தொடர்பில் தாம் மிகுந்த கவனம் எடுப்பதாகவும் அதன் பிரகாரம் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்.

இச் சைக்கிள் பவனியில் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் ஈ.பி.டி.பி. வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


















































0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr