இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இசைஞானி இளையராஜாவின் மனைவி மரணம்

JKR  செவ்வாய், 1 நவம்பர், 2011


பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா தனது 58ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை இரவு காலமானார். மாரடைப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10.40 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இசையமைப்புப் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றுள்ள இளையராஜாவுக்கு, ஜீவா மறைந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளார் என இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். பண்ணைபுரத்தைச் சேர்ந்த ஜீவா, இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரி மகள் ஆவார். இளையராஜா - ஜீவா தம்பதியருக்கு கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா ஆகிய இரண்டு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். மறைந்த ஜீவாவின் உடலுக்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr