இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வவுனியா பகுதியில் பதிவு நடவடிக்கை; கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும் முறைப்பாடு

JKR  புதன், 7 டிசம்பர், 2011


வுனியா மாறம்பைக்குளம் பகுதியில் வீடு வீடாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளுக்குச் செல்கின்ற இராணுவத்தினரே இவ்வாறு பதிவு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் இதுபற்றி அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிசாருக்கோ கிராம சேவை அதிகாரிக்கோ அல்லது கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கோ அறிவிக்கப்படாமல் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் இருப்பவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் திரட்டப்படுவதுடன் திருமணம் முடிக்காத இளைஞர் யுவதிகள் கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்கள் பிரதேச பொலிசார் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அந்தப் பதிவு நடவடிக்கை குறித்த தங்களுக்கும் தெரிவிக்கப்படவில்லையென்றும் இது பற்றி தங்களால் எதையும் கூறமுடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாக ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர். கிராமங்களில் உள்ளவர்களின் விபரம் பொதுவாக கிராமசேவை அதிகாரிகளால் திரட்டப்படுவதாகவும் கிராம சேவை அதிகாரிகளிடமே சிவில் நிர்வாக அதிகாரிகளும் மற்றும் அதிகாரிகளும் விபரம் தெரிவிக்காமல் மேற்கொள்ளப்படுகின்ற இந்த இராணுவப் பதிவினால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதுடன் திருமணமாகாதவர்களைப் படம் எடுப்பது அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr