இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜெ. வரலாறு காணாத அதிரடி- அதிமுகவிலிருந்து சசி உள்பட மன்னார்குடி குடும்பமே கூண்டோடு நீக்கம்!!!

JKR  திங்கள், 19 டிசம்பர், 2011


திமுகவினர் தங்களது கனவிலும் எதிர்பார்க்க முடியாத ஒரு செயலை முதல்வர் ஜெயலலிதா இன்று செய்துள்ளார். தனது ஆருயிர்த் தோழியான சசிகலாவை அதிமுகவை விட்டு அதிரடியாக தூக்கி எறிந்துள்ளார். சசிகலா மட்டுமல்லாமல் அவரது மன்னார்குடி குடும்ப வகையறாவையே ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு தூக்கி விட்டார். தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சி அலைகளையும் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை படு வேகமாக பரப்பியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமைக் கழக செயலாளர் சசிகலா, எம்.நடராஜன் (சசியின் கணவர்), வி.என்.சுதாகரன் (சசியின் அக்காள் மகன்), வி.என். திவாகரன் (சசியின் அக்காள் மகன்), டிடிவி தினகரன் (சசியின் அக்காள் மகன்), பாஸ்கரன் (சசியின் அக்காள் மகன்), டாக்டர் வெங்கடேஷ் (சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகன்), ராவணன் (சசியின் உறவினர்), அடையார் மோகன், குலோத்துங்கன், எம்.ராமச்சந்திரன் (நடராஜனின் உடன் பிறந்த சகோதரர்), ராஜராஜன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றனர். இவர்கள் யாரோடும் கட்சியினர் எந்த நிலையிலும் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகியோரும் நீக்கம்: இதேபோல சசிகலாவின் இன்னொரு உறவினரான டி.வி.மகாதேவன் மற்றும் தங்கமணி ஆகியோரையும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நேரத்தில்...: வரும் 30ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடக்கவுள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை அக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா எடுத்துள்ளார். இதனால் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ கலந்து கொள்ள முடியாது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr