இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கணவர் காணாமல் போனதால் மனைவி தற்கொலை; கணவர் சடலமாக மீட்பு

JKR  செவ்வாய், 17 ஜனவரி, 2012


குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற கணவர் காணாமல் போனதைத் தொடர்ந்து மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் நபர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் சடலமாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை நடேசப்பிள்ளை (வயது 62) என்பவரே திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு குளத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மீன்பிடிக்க சென்றபோது காணாமல் போனவர் ஆவார். குறித்த நபரை தேடியபோதிலும், அவர் தொடர்பான எந்தவித தகவலும் கிடைக்காத நிலையிலேயே மனைவி நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr