இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரொபர்ட் ஓ பிளக் மன நோயாளி: மஹிந்தவை மின்சாரக் கதிரையில் அமர வைக்க முயற்சி

JKR  புதன், 15 பிப்ரவரி, 2012


மெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளரான ரொபர்ட் ஓ பிளக்குக்கு மன நோய் பிரச்சினை உள்ளது என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் தலையிட அமெரிக்காவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி மஹிந்தவை மின்சாரக் கதிரைக்கு அனுப்பவே அந்த நாடு முயற்சிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இலங்கைக் கடற்பரப்பில் எண்ணணெய் வளம் இருப்பதனை அறிந்து கொண்ட அமெரிக்கா, நெருக்கடிகளை கொடுத்து நாட்டின் நிர்வாகக் கட்டமையை சீர்குலைக்க முயற்சிக்கின்றது. ஜனநாயக ரீதியாக மட்டுமே இந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும், வேறும் வழிகளில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது.வேலை நிறுத்தங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், தனியார் பஸ் உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.வேலை நிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படாவிட்டால் தொடர்ந்தும் அரசாங்கத்தின் பங்குதாரராக என்னால் கடமையாற்ற முடியாது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr