இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அவுஸ்திரேலியாவை மீண்டும் வென்றது இலங்கை

JKR  வெள்ளி, 24 பிப்ரவரி, 2012


சி.பீ. கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
ஹோபார்ட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்களைப் பெற்றது. பீட்டர் பொரெஸ்ட் 104 ஓட்டங்களைக் குவித்தார். தனது 4 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் பீட்டர் பொரெஸ்ட்டின் முதலாவது சதம் இதுவாகும். அணித்தலைவர் மைக்கல் கிளார்க் 72 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அணித்தலைவர் 81 பந்துகளில் மஹேல ஜயவர்தன 85 ஓட்டங்களைக் குவித்தார். தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசை வீரர் திசேர பெரேரா 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார். இத்தொடரில் இலங்கை அணி இறுதியாக பங்குபற்றிய 3 போட்டிகளிலும் வென்றுள்ளதுடன் அவுஸ்திரேலியாவை தொடர்ச்சியாக இரு போட்டிகளில் தோற்கடித்துள்ளது. தற்போது மூன்று அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இலங்கை அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியா 14 புள்ளிகளையும் இந்தியா 10 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr