இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வைத்தியசாலைக்கு சென்ற நடிகையின் திகில் அனுபவம்: பொலிஸ் மா அதிபர், அமைச்சரிடம் புகார்

JKR  செவ்வாய், 21 பிப்ரவரி, 2012


பி ரபல சிங்கள திரைப்பட நடிகையான சனோஜா பிபிலே, கதிர்காமத்திலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றபோது அங்கு வாளுடன் காணப்பட்ட நபர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டதாக பொலிஸ் மா அதிபரிடமும் சுகாதார அமைச்சரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
நடிகை சனோஜா தனக்கு ஏற்பட்ட மேற்படி அனுபவம் தொடர்பாக கூறியுள்ளதாவது: 'எனது பெற்றோரும் குடும்பத்திலுள்ள ஏனையோரும் கதிர்காம யாத்திரிகர் விடுதியில் தங்கியிருந்தனர். பூஜைக்காக தேவாலயத்துக்கு செல்ல ஆயத்தமானபோது நான் சுகயீனமடைந்தேன். அதனால் நானும் எனது சகோதரியும் அங்கிளும் கதிர்காமம் வைத்தியாலைக்குச் சென்றோம். அப்போது மாலை 6.30 மணியிருக்கும். வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவின் முன்னால் எமது வாகனத்தை நிறுத்திவிட்டு மாவட்ட மருத்துவ அதிகாரியின் அறைக்குச் சென்றோம். அவர் என்னை சோதித்துவிட்டு மருந்துகளை எழுதிக்கொடுத்தார். எனினும் மருந்துகொடுக்கும் நிலையம் மூடப்பட்டிருந்தது. நாம் கதவை தட்டியபோது, குழந்தையொன்றை தூக்கிக்கொண்டு கதவை திறந்த நபர் எம்மை கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் மருந்துச்சிட்டையையும் கிழித்தெறிந்தார். பின்னர் அவர் வாளொன்றை தூக்கிக்கொண்டு எம்மை துரத்தினார். எனினும் நாம் மருத்துவ அதிகாரியின் அறைக்குள் ஓடினோம்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr