இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜே.வி.பி. மாற்றுக்குழுவின் தலைவர் பிரேம்குமார் குணரட்னம் கைது

JKR  சனி, 7 ஏப்ரல், 2012



ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான குமார மஹாத்தயா என அழைக்கப்படும் பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான திமுத்து ஆட்டிகல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரேம்குமார் குணரட்னம் கிரிபத்கொடையில் வைத்தும், திமுத்து ஆட்டிகல தலவத்துகொடயில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஜனக சுதார தெரிவித்தார். இது தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது இக்கைது குறித்து தமக்குத் தெரியாது எனக் கூறினர். பிரேம்குமார் குணரட்னம் தலைமையிலான ஜே.வி.பி மாற்றுக்குழுவினர் மக்கள் பேராட்ட இயக்கத்தையும் முற்போக்கு சோசலிசக் கட்சியையும் ஸ்தாபித்தனர். அதேவேளை திமுத்து ஆட்டிகல, சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் எனும் புதிய அமைப்பின் தலைவியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr