இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாருக்கு உடனடி இடமாற்றம்

JKR  புதன், 9 மே, 2012



யாழ். மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிவரும் திருமதி இமெல்டா சுகுமாருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள
கடிதத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது... "யாழ். மாவட்ட அரச அதிபர் என்ற பதவியிலிருந்து உடனடியாக இடமாற்றம் வழங்கப்படுவதாக எனக்கு இன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து கடிதம் கிடைக்கப்பெற்றது. கடந்த 30 வருடங்களாக வடபகுதியில் கடமையாற்றிய எனக்கு பதவியுயர்வு வழங்குமுகமாக இம்மாற்றம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிகிறேன். எனக்காக செயலாளர் பதவியொன்று காத்திருப்பதாகவும் நான் அறிகிறேன். வெகுவிரைவில் ஜனாதிபதியை சந்தித்து எந்த செயலாளர் பதவி என்பது பற்றி அறிந்துகொள்வேன். இன்னமும் எந்த செயலாளர் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக இருந்த அருமைநாயகம் நாளைமுதல் யாழ். மாவட்ட அரச அதிபராக பதவியேற்கவுள்ளார். வவுனியா மாவட்ட அரச அதிபராக பதவிவகித்த திருமதி சார்ள்ஸ் - மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக பதவியேற்கவுள்ளார். அதேபோல் காலி மாவட்ட அரச அதிபராக இருந்தவர் வவுனியா மாவட்ட அரச அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்" என்று கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr