இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

12வயது மாணவியை பாலியல் வல்லுறவு செய்த இரு பிள்ளைகளின் தந்தை

JKR  வியாழன், 7 ஜூன், 2012



பொ த்துவில் கோமாரி பிரதேசத்தில் 12வயது பாடசாலை மாணவியை பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று உத்தரவிட்டார் என பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.
கோமாரி செல்வபுரம் இரண்டாம் பிரிவு பிரதேசத்தில் தாய், தந்தையை இழந்து அம்மம்மாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வரும் 12 வயது பாடசாலைச் சிறுமியை அவரது உறவினரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான 30 வயதுடையவர், கடந்த திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் அம்மம்மா கோவிலுக்குச் சென்ற போது தனிமையில் இருந்த சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது தனது தாயாரைக் காணவில்லை எனவும் அவரைத் தேடிப் பார்ப்பதற்காக தன்னுடன் சிறுமியை வருமாறும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சவுக்குக் காட்டிற்குள் கூட்டிச்சென்று பலாத்காரமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். இதன்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பிரதேச இளைஞர்கள் அங்கு சென்று, வல்லுறவில் ஈடுபட்டவரை மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பொத்துவிலைச் சேர்ந்தவர். மனைவியுடன் ஏற்பட்ட சண்டையையடுத்து இவரின் பிறந்த ஊரான செல்வபுரத்தில் தாயாரின் வீட்டில் தங்கியிருந்த போதே மது போதையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை செவ்வாய்க்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr