இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வாழைச்சேனைப் பகுதியில் வாவியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

JKR  வெள்ளி, 6 ஜூலை, 2012



ட்டக்களப்பு, ஊறணிப் பகுதியில் உள்ள வாவியில் இருந்து நேற்று இரவு பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு சுமார் 8.00 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள வாவியில் இருந்து மீனவர்களின் உதவியுடன் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, ஞானசூரியம் சதுக்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மி (52 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாகவும் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த பெண் கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று தனிமையில் வசித்து வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் கொலை,கொள்ளைச் சம்பவத்தினால் மக்களிடையே அச்சம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் எப்.எம்.பர்ஹான் குறிப்பிடுகிறார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr