இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கலிபோர்னியா வழக்கிற்கும், எனக்கும் தொடர்பில்லை: நித்யானந்தா சொல்கிறார்|

JKR  செவ்வாய், 24 ஜூலை, 2012



லிபோர்னியா வழக்கிற்கும், எனக்கும் சம்பந்தமில்லை. நித்யானந்தா பீடம் மட்டும் தான் என்னுடையது. எனது பெயரில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகளுக்கும், எனக்கும் தொடர்பில்லை,'' என, மதுரையில், இளைய ஆதீனம் நித்யானந்தா கூறினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில், நிதி மோசடி தொடர்பாக, நித்யானந்தா அமைப்பிற்கு எதிராக, கோர்ட் உத்தரவிட்டது.
இதுகுறித்து, நேற்று, மதுரையில் நித்யானந்தா கூறியதாவது:கலிபோர்னியா வழக்கிற்கும், எனக்கும் சம்பந்தமில்லை. நித்யானந்தா பீடம் மட்டும் தான் என்னுடையது. என் பெயரில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகளுக்கும், எனக்கும் தொடர்பில்லை. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடங்களில், வாடகைதாரர்களை காலி செய்யுமாறு, எனது சீடர்கள் மிரட்டவில்லை. மருத்துவமனை, பள்ளிகளை புறநகர் பகுதியில் அமைப்பதை விட, நகருக்குள் அமைத்தால், பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில், காலி செய்யுமாறு கூறிவருகிறோம். ஜூலை 30ல் ஆஜராகும்படி, கர்நாடக கோர்ட் உத்தரவிடவில்லை. சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகும்படி தான், சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆறு மாதங்களுக்கு முன், அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டேன்.அங்கு சென்றுவந்த பின், சி.பி.சி.ஐ.டி., முன் ஆஜராவேன். மதுரை ஆதீன சொத்துகள், நிறுவனங்கள் அனைத்தும், மூத்த ஆதீனம் பெயரிலேயே இருக்கும். அவர் உத்தரவுபுஅபடி செயல்படுவேன். இவ்வாறு கூறினார். மதுரை ஆதீனம் கூறியதாவது:எனக்கும், நித்யானந்தாவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. குளிர் ஒத்துக்கொள்ளாததால், அவருடன் கொடைக்கானல் செல்ல முடியவில்லை. அதற்கு பதில், திருவண்ணாமலை வரை சென்று, அவரை வழியனுப்ப உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார். பின், இருவரும், திருவண்ணாமலை புறப்பட்டனர். இன்று, நித்யானந்தா மட்டும், அமர்நாத் யாத்திரை புறப்படுகிறார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr