இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கும்பல் குழுக்களே அரசின் கை பொம்மையாக உள்ளன: சரத் பொன்சேகா

JKR  திங்கள், 23 ஜூலை, 2012



ழல் மோசடி, பாலியல் வல்லுறவு மற்றும் பிழையான முறையில் முதலீட்டுவோர் போன்ற கும்பல்களே அரசின் கை பொம்மைகளாக உள்ளனர் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். 'உங்களுக்காக நாம்' என்ற அமைப்பின் கண்டி கிளை ஏற்பாடு செய்த கூட்டம் கண்டி வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் இராணுவ தளபதி, "ஆசியாவிலே ஆச்சரியம் மிக்க நாடாக இலங்கையை மாற்றும் பணியல் பல்வேறு வித்தியாசமான வியப்புக்களை நாம் காண்கிறோம். அவற்றை பட்டியல்படுத்தி முடிக்க இயலாதளவு நீண்டுகொண்டே செல்கின்றது. உலக நாடுகள் கடலில் துறைமுகம் அமைத்து வருவது வழமை. ஆனாலும் நாம் தரையை கடலாக்கி அதில் துறைமுகம் அமைத்து ஆசியாவில் ஒரு ஆச்சரியத்தை உருவாக்கி உள்ளோம். அதேபோல் உலகிலுள்ள சர்வதேச விமான நிலையங்கள் பலவற்றில் நிமிடத்திற்கு பல விமானங்கள் தரை இறங்குகின்றன. ஹீத்ரோ விமான நிலையத்தில் 12 செக்கனுக்கு ஒரு விமானம் வீதம் மேலேருகின்றன. அவ்வாறான நாடுகள் கூட மேலுமொறு சர்வதேச விமான நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபடவில்லை. ஆனால் கட்டுநாயக்காவில் இருந்து 30 நிமிடங்களில் ஹம்மாந்தோட்டையை சென்றடையக் கூடிய தூரத்தில் மற்றொறு சர்வதேச விமான நிலையத்தை அமைத்து நாம் ஆசியாவில் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளோம். அதேபோல் இரவு வேளைகளில் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு ஒரு விமானம் வீதம் வருகின்றது. இந்நிலையில் எமது நாட்டிற்கு சர்வதேச விமான நிலையம் இன்னொன்று தேவையா என்ற கேல்வி எழுகின்றது. சின்னஞ் சிறிய தீவான இலங்கையின் இயற்கை வனப்பு, காலநிலை மாற்றம், சுவாத்தியம் என்பன உலக நாடுகளுக்கு மிகவும் வியப்பானது. இதை கண்டுகளிக்கவே அனேக சுற்றுலாத்துறையினர் இலங்கை வருகின்றனர். தரை மார்க்கமாக சென்றால் தான் இவற்றை சுவாரஸ்யமாக பார்க்க முடியும். இதை விட்டு; விமான நிலையங்கள் அமைத்து ஆசியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தவுள்ளோம். ஊழல் மோசடி, பாலியல் வல்லுறவு, பிழையான முறையில் முதலிட்டுவோர் போன்ற கும்பல்களே அரசின் கை பொம்மையாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் என்ன தவறு செய்தாலும் அதனை மறைக்க அரச அதிகாரிகள் முன்வருகின்றனர். ஏனென்றால் சுயாதீனமாக ஆணைக்குழுக்கள் இன்றில்லை. அனைத்து அதிகாரமும் தனி நபரின் கையில் குவிந்துள்ளதால் அவருக்கு நல்ல பிள்ளையாக இருந்து அவரை திருப்திபடுத்தினால் மட்டுமே தம்மால் நிலைத்திருக்க முடியும் என்ற ரீதியில் அரச நிர்வாக சேவை, நீதி சேவை மற்றும் சட்டவாக்கம் போன்ற அனைத்துமே ஒருவரின் ஆணையின் கீழ் இருப்பதால் அங்கு சுயமான செயற்பாட்டை எதிர்பார்க்க முடியாதுள்ளது. நான் இராணுவத்தில் சேர்நத காலமான 1970ஆம் ஆண்டுகளில் டொலர் ஒன்றின் பெறுமதி 4 ரூபாவாக இருந்தது. பின்னர் அது 13.50 ரூபாவாகியது. இன்று 135 ரூபாவாகியுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது அது 300 ரூபாவாகலாம" என்றார். இக்கூட்டத்தில் திருமதி அனோமா பொன்சேகா உட்பட பலர் உரையாற்றினர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr