இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வாழைச்சேனை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு _

JKR  சனி, 7 ஜூலை, 2012



வா ழைச்சேனை பேத்தாழை பகுதியில் ஒரு தொகை ஆயுதங்களை சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேத்தாழையில் ஒரு தொகை ஆயுதங்களை வெலிக்கந்தையில் இருந்துவந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். பேத்தாழை,விநாயகபுரம் பகுதியில் மக்கள் நடமாற்றம் அற்ற பகுதியிலேயே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனடிப்படையில் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும்,கைக்குண்டு ஒன்றும்,மிதிவெடியொன்றும் இவ்வாறு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவை கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளால் மறைத்துவைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனவும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr