இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை பற்றிய கோவைகள் இரகசிய பட்டியலிலிருந்து நீக்கும் வேலை

JKR  வியாழன், 11 அக்டோபர், 2012



லங்கை அடங்கலாக பல நாடுகள் தொடர்பான இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோவைகளை இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கும் வேலைகள் நடப்பதாக இந்திய அரசாங்கம் கூறியுள்ளதாக பி.ரி.ஐ. சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சு ஏற்கெனவே 70,000 கோவைகளை இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் பாகிஸ்தான், ஈரான், இலங்கை, யூரேஷியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகள் தொடர்பான கோவைகளை இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கும் பெரியதொரு செயல்த்;திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் பினக் சக்ரவர்த்தி கூறினார். அணு தொழில்நுட்பம் மற்றும் அணுவாயுதக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாடொன்றில் பேசியபோது அவர் இதனைக் கூறினார். உலகிலுள்ள அணுவாயுதங்கள் யாவும் அழிக்கப்படும்வரை பாதுகாப்புக்காக அணுவாயுதங்களை வைத்திருக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டெனவும் அவர் கூறினார். அணு தொழில்நுட்பம் தொடர்பான சில கோவைகளும் இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றனவெனவும் அவர் கூறினார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr