இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கடந்த வாரத்தில் சிறுமிகள் மீது மூன்று பாலியல் சம்பவங்கள் : யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்

JKR  வெள்ளி, 14 டிசம்பர், 2012


யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மூன்று தம்மிடம் முறையிடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜிப்ரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான வாராந்த சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எம்மிடம் கடந்த வாரம் மூன்று பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேற்படி மூன்று பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. இச் சம்பவங்களில் 15 வயதிற்கும் 16 வயதிற்கும் இடைப்பட்ட சிறுமிகளே பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மேற்படி சம்பவங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நாம் சந்தேக நபர்களை கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையடுத்து சந்தேக நபர்கள் நீதிமன்றத்தின் பணிப்புக்கு அமைவாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr