இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் பயிற்சி வழங்கும்: ஏ.கே.அந்தோனி

JKR  செவ்வாய், 11 டிசம்பர், 2012


லங்கை மற்றும் அதனை அண்டிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் குறுகிய மற்றும் நீண்டகால பயற்சிகளை வழங்கி வருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். இந்த பயிற்சிகள் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத துறைகளில் நடைபெறுவதாக அவர் லோக் சபாவில் கூறியுள்ளார். இலங்கை இராணுவத்தினருக்கு இன்னும் இந்தியா பயிற்சி வழங்கி வருகிறதா என பி.லிங்கம், பரபோத் பந்தி ஆகிய அங்கத்தவர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இராணுவ பயிற்சியை மாறி வழங்கும் திட்டத்தின்படி இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுடனும் இராணுவ பயிற்சி பரிமாறப்படுவதாக அவர் கூறியுள்ளார். தேவைக்கேற்ப, பாதுகாப்பு, கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அமைந்துள்ள பல்வேறு மாநிலங்களில் பயிற்சிகள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவதில் பிரச்சினை உண்டா என கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் அந்தோனி, 'தேசிய நலனில் சகல அம்சங்களையும் கருத்திற்கொண்டு இந்தியா செயற்படுவதாக' அவர் கூறினார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr