இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மொரட்டுவ விகாராதிபதி கொலை: மேலும் 7 சந்தேக நபர்கள் கைது

JKR  புதன், 6 பிப்ரவரி, 2013

மொரட்டுவ விகாராதிபதி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் மேலும் 7 சந்தேக நபர்கள் நேற்று மொரட்டுவ மற்றும் வடக்கு களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவ எகடஉயன பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியான வண. சுனந்தோபன்ராமான்யபதி மெடிகஹதென்ன விமல சிங்க தேரர் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு 09.30 மணியளவில் இனந்தெரியாதோரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு பிரதான சந்தேக நபர்கள் பொரல்லஸ்கமுவ பகுதியில் வைத்து கடந்த 4ஆம் திகதி காலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இந்நிலையில் மொரட்டுவ மாநகர சபையின் பிரதி மேயர் சுஜித் புஸ்பகுமார நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புவுள்ளதாக கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நேற்று இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் மேலும் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr