இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மனித உரிமை கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை: இராணுவம் முற்றாக மறுப்பு

JKR  வெள்ளி, 22 பிப்ரவரி, 2013



னித உரிமை கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நம்பகத்தன்மை வாய்ந்தவை அல்ல என இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
இலங்கை பாதுகாப்பு படையினரால் இலங்கை தமிழர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பான 75 சாட்சியங்கள் அடங்கிய 140 பக்கங்களை கொண்ட அறிக்கை, மனித உரிமை கண்காணிப்பகத்தால் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் இவை. வெளிநாடுகளில் வாழும் சில தீய சக்திகள் வேண்டுமென்றே ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கைப் படையினர் குற்றம் செய்தார்கள் என்று கூறுபவர்கள் இலங்கைக்கு வந்து இங்குள்ள தமிழர்களிடம் கேட்டு உண்மை நிலையை அறிய வேண்டும். உள்நாட்டிலுள்ள தமிழர்கள் இராணுவம் தொடர்பில்நன்கு அறிவார்கள் என்றார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr