இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்: சர்வதேச மன்னிப்புச் சபை

JKR  திங்கள், 29 ஏப்ரல், 2013

ரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், எச்சரிக்கைகள், தடுத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மாற்றுக் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. 'மாற்றுக்கருத்துக்கள் மீதான தாக்குதல்" என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊடகவியாளர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போன்றோர் இவ்வாறு அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோர் மீது வன்முறையான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய வலய பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக விமர்சனப் பாங்கான கருத்துக்களின் வீழ்ச்சியை அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட அதிகமானவர்கள் அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அரசாங்கம் அதிகாரத்தை விஸ்தரித்து கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறுவதற்கு முன்னதாக நாட்டின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு உலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் காத்திரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சட்டங்களுக்கு அமைய நம்பகமானதும், நியாயமானதுமான வகையில் விசாரணைகளை நடாத்த அரசாங்கம் தவறியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr