இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இன்று வருகின்ற இந்திய எம்.பி.க்கள் குழு கூட்டமைப்பை சந்திக்கும்

JKR  திங்கள், 8 ஏப்ரல், 2013



நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஆறு பேரைக்கொண்ட இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகின்றது.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் எம்.பி.க்கள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் வாதிக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்களே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அழைப்பின் பேரிலேயே இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இலங்கை வருகின்றனர். இவ்வாறு விஜயம் மேற்கொள்ளும் இந்திய எம்.பி.க்கள் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டபல தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr