வவுனியா நிவாரண முகாம்களில் இருந்து ஏற்கனவே அழைத்து வரப்பட்டு மிருசுவில் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 30 பேர் இன்று பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று மாலை மிருசுவில் இடைத்தஙகல் முகாமிற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் இன்று பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் மாணவர்களைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டதுடன் மீண்டும் பல்கலைக்கழகத்தில் சந்தித்து அவர்களது தேவைகள் மற்றும் குறைபாடுகள் குறித்துக் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் யாழ்.அரசாங்க அதிபர் கே.கணேஷ் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக