இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பாதுகாப்பு படையினருக்கு மேலும் 34 பில்லியன் ரூபா தேவை:அரசாங்கம்

JKR  வெள்ளி, 9 அக்டோபர், 2009


இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு செலவினங்களுக்காக 34 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

இராணுவம், கடற்படை, வான்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகியவற்றுக்காக இந்த செலவினங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தமது உத்தேச கணக்கு திட்டத்தில், உயிரிழந்த மற்றும் காணாமல் போன இராணுவத்தினருக்கான வேதனங்கள், படைத்தரப்பை வலுப்படுத்தல் மற்றும் படைத்தரப்புக்கான தனிப்பட்ட செலவினங்கள் என்பவற்றுக்காக இந்த தொகையை கோரியுள்ளார்.

அதன் படி, 19.6 பில்லியன் ரூபா இராணுவத்தினரின் கட்டமைப்பு பராமரிப்புக்கு தேவைப்படுகிறது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த படைவீரர்களுக்கான செலவினங்களாக 570 மில்லியன் ரூபா பற்றாக்குறை நிலவுகிறது.

அத்துடன் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக 7 பில்லியன் ரூபா பற்றாக்குறையாக காணப்படுகிறது.அதேவேளை வான்படை செலவினங்களுக்காக 1.6 பில்லியன் ரூபாவும், 2.9 பில்லியன் ரூபா கடற்படை செலவினங்களும் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சிவில் பாதுகாப்பு குழுவுக்கும் 1.6 பில்லியன் ரூபா செலவின பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டை விட 34 பில்லியன் ரூபா அதிகமாக பாதுகாப்பு செலவின ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கிடையில் ஒப்பீட்டு ரீதியில்,2007 ஆம் ஆண்டு பாதுகாப்பு செலவீனங்களுகாக 108.67 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2008 ஆம் ஆண்டு 139.4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2009 ஆம் ஆண்டு 166.44 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டன

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr