இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கன்னட படத்தில் இருந்து விலகினார் திவ்யா

JKR  சனி, 10 அக்டோபர், 2009

குத்து ரம்யாவாக தமிழில் அறிமுகமான திவ்யா, பொல்லாதவன் பட வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் தமிழ் சினிமாக்காரர்கள் திவ்யாவை சீண்டவில்லை. இதனால் மீண்டும் கன்னட சினிமா பக்கம் போன திவ்யா, ஜஸ்ட் மாட் மாடால்லி உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில் ஜஸ்ட் மாட் மாடால்லி படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் திவ்யாவுக்கும், டான்ஸ் மாஸ்டர் ஹர்ஷாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நடன மாஸ்டர்கள் சங்கம் பிலிம்சேம்பரில் புகார் அளித்தது. இதையடுத்து டான்ஸ் மாஸ்டரிடம் திவ்யா மன்னிப்பு கேட்டார். இதனைத்தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் மீது கோபத்தில் இருந்த திவ்யா, ‌ஜஸ்ட் மாட் மாடால்லி படத்தில் இருந்து விலகியுள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் எனது மனதை பாதித்துவிட்டது. அப்படத்தில் நான் நடிக்க வேண்டிய சில காட்சிகள் இருக்கிறது. மனக்கசப்புடன் தொடர்ந்து நடிக்க விரும்பாததால் விலகி விட்‌டேன், என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr