இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

JKR  வெள்ளி, 9 அக்டோபர், 2009


மோதல்களின் போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விமானப் படையினரின் 'சேவா வனிதா பிரிவு' வீடுகளை அன்பளித்துள்ளது.புளியங்குளம் பகுதியில் 1998 ஆம் ஆண்டு கிளேமோர் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஒன்பது லட்சம் பெறுமதியான வீடு வழங்கப்பட்டுள்ளது.

வெலிகமவில் புதிதாக நிமாணிக்கப்பட்ட இவ் வீட்டினை உயிரிழந்த இராணுவ வீரரான சார்ஜண்ட் நந்தஸ்ரீ என்பவரின் மனைவிக்கும் அவரது மகனுக்கும் முன்னாள் விங் கொமாண்டர் மற்றும் திருமதி நர்மி விக்ரமசிங்க ஆகியோர் அன்பளித்தனர்.

இந்நிகழ்வில் 'சேவா வனிதா''சேவா வனிதா பிரிவின்' தலைவி நெலும் குணதிலக மற்றும் 'அனுல பெர்னாண்டோ வீடமைப்பு திட்ட' முகாமையாளர் தாரக டயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேவேளை அன்றைய தினம் ஸ்ரீ லங்காப்படையில் 'சேவா வனிதா பிரிவு' கடந்த 2008 ஆம் ஆண்டு மொரவேவவில் உயிரிழந்த இராணுவ வீரரான நிலந்த என்பவரின் குடும்பத்திற்கு வீடொன்றை கையளித்துள்ளது.இவ்விரு வீடுகளும் கொக்கல விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி விங் கொமாண்டர் அநுராத பண்டாரவின் மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr