இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ் வேலணை மத்திய கல்லூரியில் முத்தமிழ் விழா

JKR  ஞாயிறு, 15 நவம்பர், 2009

தீவகக் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் யாழ்.வேலணை மத்திய கல்லூரியில் நேற்று (14.11.2009) நடைபெற்ற முத்தமிழ் விழாவில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் ஜீ.வி.இராதாகிருஷ்னண் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ்மொழிப் பிரிவு இவ்விழாவை சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்ததுடன் விழாவின் ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்றி வைக்க தேசிய கீதம் வலய கீதம் தமிழ்தாய் வாழ்த்து மற்றும் வரவேற்பு நடனம் என்பவற்றைத் தொடர்ந்து வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி உரைநிகழ்த்தினார்.

முதல் தடவையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இப்பகுதிக்கு வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் தற்போது அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளமையையடுத்து வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடபகுதி மக்களுக்கென பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள வட மாகாண ஆளுனர் அபிவிருத்திக்காக முன்வைத்துள்ள ஆலோசனைகளைக் கவனத்திற்கொண்டு அவசர ஏற்பாடாக இக்கல்லூரிக்கென ஒரு தொகுதி புத்தகங்களையும் மின்பிறப்பாக்கி இயந்திரமொன்றையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியைத் தொடர்ந்து சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரைநிகழ்த்துகையில் மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் இத்தகைய முத்தமிழ் விழாக்கள் கல்விச் சமூகத்திற்கு மிகவும் மகிழ்ச்சி தரும் செயற்பாடாகும் என்பதுடன் இவ்வாறான விழாக்கள் தொடர்ந்தும் குடா.நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுவதற்கு தம்மாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தீவகத்திற்கென தனியான ஒரு கல்வி வலயத்தை உருவாக்கியவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரேயென்றும்;, இப்பகுதி மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒன்றிணைந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை எதிர்காலத்தில் ஏற்படுத்திக் கொடுப்பது மக்களின் கைகளிலேயே இருப்பதாகத் தெரிவித்ததுடன், இக்கல்லூரிக்கான விடுதி வசதி மற்றும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நிதியை அடுத்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை முத்தமிழ் விழாவின் இறுதி நிகழ்வாக கல்வி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பரிசில்களை வழங்கிக் கௌரவித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.











0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr