இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பல்லாயிரக் கணக்கானோர் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

JKR  வியாழன், 5 நவம்பர், 2009


மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்படிருந்தவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

30 வருடங்களாகத் தொடர்ந்த விடுதலைப் புலிகளுடனான மோதல் கடந்த மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து 300,000 பேர் இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ஒகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 90,000 பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 10 நாட்களுக்குள் 30,000 மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பாளர் சோலா டொவெல் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் விரைவான மீள்குடியேற்ற பணிகளைத் தாம் வரவேற்பதாகவும் அவர் தொலைபேசி வாயிலான நேர்காணலில் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் மட்டும் 2,500 முதல் 4,000 பேர்வரை மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக சோலா டொவெல் தெரிவித்தார்.முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் வவுனியா, மன்னார் வடகிழக்கு, வவுனியா வடக்கு மற்றும் கிழக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

சொந்த இடங்களில் காணப்படும் நிலக்கண்ணி வெடி அபாயம் காரணமாக அவர்கள் தமது இருப்பிடங்களுக்குச் செல்ல முடியாதுள்ளது.

மீளக்குடியேறுவர்களில் பலர் பாடசாலைகளிலும், தேவாலயங்களிலும் மற்றும் சில கட்டிடங்களிலுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதுடன் நிவாரண பணியாளர்களும் முழு நேரமும் அங்கிருப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr