ஐதராபாத் வில்லாமேரி மகளிர் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்த அனுஷா ராக்கிங் கொடுமையால் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இவர் படிப்பில் முதலிடத்தில் இருந்தார். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். கூச்ச சுபாவமும் இவருக்கு அதிகம்.
இதனால் அவரை சக மாணவிகள் அடிக்கடி கேலி செய்து வந்தனர். இதுபற்றி அவர் தனது தாயாரும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியையுமான ராதாபாயிடம் கூறினார்.
இதனால் ஆவேசம் அடைந்த ராதாபாய் மகள் அனுஷாவை கேலி செய்த மாணவிகள் நிகிதா, ரிஷிதா, ஐஸ்வர்யா, அம்ரிதா ஆகியோரை நேரில் சென்று திட்டினார். இது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு வந்த அனுஷாவை 4 மாணவிகளும் சேர்ந்து ராக்கிங் செய்தனர். இதுபற்றி உன் தாயாரிடம் சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றனர். இதனால் மனம் உடைந்த அனுஷா, அழுதபடியே கல்லூரியின் 4-வது மாடிக்கு வேகமாக சென்றார். பின்னர் அவர் திடீரென அங்கிருந்து கீழே குதித்தார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை கல்லூரி ஊழியர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுபற்றி பஞ்சாலகுட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து ராக்கிங் செய்த மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவிகளின் ராக்கிங் கொடுமையால் மாணவி உயிர் இழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக