இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கலாசார நிகழ்வுகளை எதிர்வரும் ஜுலை மாதம் இறுதிப் பகுதியில் கொழும்பில் நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் யாழ் செயலகத்தில் நடைபெற்றது!

JKR  ஞாயிறு, 15 நவம்பர், 2009

தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரம் என்பனவற்றை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வகையிலான கலாச்சார நிகழ்வுகளை கொழும்பில் நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ்.அரசாங்க செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் அனுசரனையுடன் புத்துயிர் பெரும் வடபகுதியின் அபிவிருத்தி நடவடிக்கைளின் ஊடாக தமிழ் மக்களது வாழ்வியலை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்வுகளை எதிர்வரும் ஜுலை மாத இறுதிப் பகுதியில் கொழும்பில் நடாத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட விரிவுரையாளர்களும் சிறந்த கலைஞர்களும் சமூகமளித்திருந்த இச்சந்திப்பில் கலைநிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி விளக்கிக் கூறினார்.

கலாச்சார நிகழ்வுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாகாண கலாசார அமைச்சின் ஊடாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் தமிழ் மக்களின் உணர்வுகளை சிறந்த முறையில் வெளிக்கொண்டுவரக்கூடிய வகையில் கலை நிகழ்வுகளை வடிவமைத்து வழங்க வேண்டும் எனவும் வட மாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

கலாச்சார விவகார அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகளின் சீரான பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் யாழ். அரசாங்க அதிபர் கே.கணேஷ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடல்களில் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr