இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கருணாநிதியை கூண்டில் நிறுத்தி விசாரிப்பேன்-வைகோ !!

JKR  சனி, 19 டிசம்பர், 2009


உசிலம்பட்டி: கேரளத்துக்கு தமிழகத்தில் இருந்து எந்தப் பொருளும் செல்ல விடாமல் நடத்தப்படும் மறியல் போராட்டத்தில்
தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வீட்டுக்கு ஒருவர் என்று வந்து கலந்து கொள்ள வேண்டும். தென் மாவட்ட மக்களி்ன் பேராட்டத்தை எதிர்க்கும் சக்தி நாட்டில் யாருக்கும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை அருகில் கேரள அரசு புதிய அணை கட்டுவதை எதிர்த்து டிசம்பர் 29ம் தேதி மதிமுக சார்பில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டம் குறித்து வைகோ உசிலம்பட்டி பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

கேரள அரசு புதிய அணை கட்டினால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படும். புதிய அணைக்காக 1.20 லட்சம் டன் பாறைகளை உடைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக வெடி பொருட்களும் தயார் நிலையில் உள்ளன. இவை வெடிக்கச் செய்யப்பட்டால் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

கேரள முதல்வர் அச்சுதானந்தன் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டில் முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரள அரசு 32 முறை வாய்தா வாங்கியது.

இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று கேரள வக்கீல் கோரியபோது கருணாநிதி தமிழக வக்கீல் மூலம் பெஞ்ச் விசாரணைக்கு ஒப்புதல் அளித்து விட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது என்று நாடகமாடுகிறார்.

கருணாநிதியும், மத்திய அரசும் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியை நான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரணை நடத்துவேன்.

புதிய அணை கட்டியதும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கேரள அரசு மறுக்கும். வரும்முன் காப்போம் திட்டமாக புதிய அணை அமைக்க விடாமல் வரும் டிசம்பர் 29ம் தேதி கேரள பகுதிக்கு தமிழகத்தில் இருந்து எந்தப் பொருளும் செல்ல விடாமல் மறியல் நடத்தப்படும்.

இந்த மறியலில் ஐந்து மாவட்ட மக்களும் வீட்டுக்கு ஒருவர் என்று வந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். தென் மாவட்ட மக்கள் விழித்து எழ வேண்டும். தென் மாவட்ட மக்களி்ன் பேராட்டத்தை எதிர்க்கும் சக்தி நாட்டில் யாருக்கும் இல்லை என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr