இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி மற்றும் மணல் ஏற்றுதல் தொடர்பாக நேரில் கண்டறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மணல்காடு பிரதேசத்திற்கு விஜயம்.

JKR  சனி, 19 டிசம்பர், 2009

யாழ். மாவட்டத்தில் இயற்கை மற்றும் மனித அழிவுகளினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டதும் தற்சமயம் அதிகளவான மக்கள் நிவாரணத்தை நம்பி நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் பிரதேசமான வடமராட்சி கிழக்கு பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் விஜயம் செய்தார்.

யாழ். மாவட்டத்தில் பெருமளவு கட்டட நிர்மாண நடவடிக்கைகளுக்கு வடமராட்சி கிழக்கு பிரதேசத்திலிருந்தே மணல் எடுத்துச் செல்லப்படும் நிலையில் அதனை ஒழுங்கமைக்கவும் அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இவ்விஜயத்தின் மற்றுமோர் நோக்கமாக காணப்பட்டது. இது தொடர்பாக இன்று காலை வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு சென்ற அமைச்சரவர்கள் குடத்தனை மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற முக்கிய கூட்டம் ஒன்றில் பங்குபற்றினார். இக்கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் சிறிஸ்கந்தகுமார் பிரதேச ராணுவ கட்டளை அதிகாரி கேணல் விஜேரட்ண வடமராட்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.வெதமுல்ல வடமராட்சி ஈபிடிபி அமைப்பாளர் சிறிரங்கேஸ்வரன் பருத்தித்துறை பிரதேச சபை உத்தியோகத்தர் பூபாலசிங்கம் பாடசாலை அதிபர் சிவராஜா உட்பட உழவியந்திர உரிமையாளர்கள் மணல் ஏற்றுவோர் மற்றும் பிரதேச பொதுமக்கள் என பெருந்தொகையானோர் பங்குகொண்டனர்.

பிரதேச மக்களின் தேவைகள் மற்றும் மணல் ஏற்றுதல் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டு கூட்டத்தில் பங்குபற்றியோரின் கோரிக்கைகளும் ஆராயப்பட்ட நிலையில் மணல் ஏற்றுவோருக்கு டக்ரர் மூலம் தொடர்ச்சியாக குடிநீர் விநியோகித்தல் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து எவ்வித தடையும் இல்லாமல் மணல் ஏற்றும் பணிகளை வழமைக்குத் திருப்புதல் பொதுமக்களின் முக்கிய பாவனை வீதியாகிய வீரகத்தி பிள்ளையார் வீதியை திருத்த நடவடிக்கை எடுத்தல் அத்துடன் குடத்தனை வரணி வீதி புனரமைப்பு மணல்காடு ஆறாம் கட்டயடி மத்திய பகுதி என்ற வகையில் கலாச்சார மண்டபம் அமைத்தல் படிப்பறிவற்றோருக்கு மாலை நேர கல்வி புகட்டுவதற்கு ஏற்பாடு செய்தல் வடமராட்சி கிழக்கு உழவியந்திர உரிமையாளர் நலன்புரிச் சங்கத்தை பதிவுசெய்தல் மணல் ஏற்றுதலில் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை வழங்குதல் அம்பன் ஆஸ்பத்திரியை மேம்படுத்தல் விளையாட்டு மைதானம் அமைத்தல் ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டு இணக்கம் காணப்பட்டன.
மேலும் பெரும்பாலான உழவியந்திர சாரதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் முறைப்படி அதனைப் பெற்றுக்கொள்வதற்கும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி நடவடிக்கை எடுத்தார். பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து பாதுகாப்பு தரப்பினருடன் கலந்தரையாடியதை அடுத்து மூடப்பட்டிருந்த வெள்ளிக்கட்டு பாதை உடனடியாக பொதுமக்களின் பாவனைக்காக திறப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அறிவித்தபோது கூடியிருந்தோர் கரகோசம் செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இக்கூட்டத்தின் இறுதியில் பிரதேசத்தில் மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.



0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr