இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வவுனியாவில் 15 ஆம் திகதி மீண்டும் மீள்குடியேற்றம் ஆரம்பம்

JKR  திங்கள், 8 பிப்ரவரி, 2010


மீள்குடியேற்றப் பணிகள் வவுனியாவில் மீண்டும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.இத்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் படுவோர்க்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கமைய ஐரோப்பிய ஆணைக்குழு 3 ஆயிரத்து 900 வீடுகளையும் உலக வங்கி 5 ஆயிரம் வீடுகளையும் அமைத்துக்கொடுக்க முன்வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 75 ஆயிரம் பேரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையிலுமே மீளக் குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.

நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஏற்பட்ட தாமதத்தினால் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் கடந்த 02 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 02 ஆம் திகதி பூநகரிக்கு ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டம் கரச்சி பிரதேசத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும் 300 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr