இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ்.பல்கலை. மாணவர்களுக்கு அரசியல் சாயம் பூசி, எங்களை அவதிக்குள்ளாக்காதீர்கள்! : -யாழ். பல்கலை. மாணவர்கள்

JKR  வியாழன், 18 மார்ச், 2010

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாடு தொடர்பாக அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தங்களுக்குச் சாதகமாகவும், தான்தோன்றித்தனமாகவும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு
தமிழ் கட்சி ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். பத்திரிகைகளில் இச்செய்தி வெளியாகியிருந்தது.
அரசியல் தலையீடுகளினால் கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் யாவரும் அறிந்ததே. பல மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் கடத்திச்செல்லப்பட்டனர். பலர் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக தங்கள் கல்வியைத் தொடர முடியாமல் இடைநடுவே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டமையும் அனைவரும் அறிந்ததே.
தற்போது ஒரு சுமுக நிலை தோன்ற ஆரம்பித்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் அரசியல் சாயம் பூசி, மீண்டும் அவர்களை சிக்கல்களில் மாட்டிவிடும் விதமாக அரசியல்வாதிகள் செயற்பட வேண்டாம் என பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
அரசியல்வாதிகள் தங்களின் கொள்கைகளை நேர்மையாக மக்கள் மத்தியில் முன்வைக்கும் போது, தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக எமது பெற்றோர்கள் தீர்மானிப்பார்கள்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது ஒரு சில மாணவர்கள் மட்டும் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பாகும். அவர்களின் கருத்து முழு பலகலைக்கழக மாணவர்களின் கருத்தல்ல என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மாணவர்களாகிய நாம் எமது கல்வியில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது இவ்வேளையில், எங்களை அரசியல் சகதிக்குள் இழுத்து, எங்கள் கல்வியை பாழாக்காதீர்கள் என அனைத்து அரசியல்வாதிகளிடமும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

-யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr